அமெரிக்கா எல்லாம் இல்லைங்க; கனடா நோக்கி படையெடுக்கும் இந்தியர்கள்..!

தவறான விசா கொள்கைகளின் காரணமாக, திறமை வாய்ந்த இந்தியர்கள், அமெரிக்காவிற்கு பதிலாக கனடாவிற்கு பெரிய அளவில் செல்லத் தொடங்கியுள்ளதாக அமெரிக்க நாடாளுமன்றத்தின் குடியேற்றம் மற்றும் குடியுரிமை தொடர்பான விசாரணை குழுவினரிடம், அமெரிக்க கொள்கைகான தேசிய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
மார்ச் 2021ல் அமெரிக்காவில் பணி புரிய அளிக்கப்படும் 85,000 ஹெச்.1பி விசாக்களுக்கு, 3.08 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டிய இந்த ஆய்வு நிறுவனம், இவற்றில் 72 சதவீத விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்படுவதற்கு முன்பே நிராகரிக்கப்படுவதாக கூறியுள்ளது.
அமெரிக்காவில் தற்போது மூன்று வகையான விசாக்களின் அடிப்படையில் 9.15 லட்சம் இந்தியர்கள் பணி புரிந்து வருகின்றனர். 2030இல் இவர்களின் எண்ணிக்கை 21.95 லட்சமாக அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
2016ஆம் ஆண்டை விட 2018ல் அமெரிக்க பல்கலைகழகங்களில் முதுகலை கம்யூட்டர் பொறியியல் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 25 சதவீதம் குறைந்துள்ளதாக அமெரிக்க கொள்கைகான தேசிய ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்க பல்கலைகழங்களில் முதுகலை கம்யூட்டர் பொறியியல் பயிலும் மாணவர்களில் 75
சதவீதத்தினர் வெளிநாட்டு மாணவர்கள் ஆவர்.  இந்த வெளிநாட்டு மாணவர்களில் முன்றில் இரண்டு பங்கினர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
2016ஆம் ஆண்டை விட 2018இல் கனடா பல்கலைகழகங்களில் பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 127 சதவீதம் அதிகரித்து 1.72 லட்சமாக அதிகரித்துள்ளது  அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கையில் மாற்றம் கொண்டு வர வேண்டும் எனவும் அமெரிக்க கொள்கைகான தேசிய ஆய்வு நிறுவனம் அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

Contact Us