பாதுகாப்பு செயலரின் அதிரடி பணிப்பு! விக்டர் சோசை உட்பட பலர் விரைவில் கைதா?

மன்னார் மாவட்டத்திலுள்ள கத்தோலிக்க சிற்றாலய செரூபங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை உடனடியாக கைது செய்யுமாறு ஸ்ரீலங்கா பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அதிகாரிகளுக்கு பணித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள தொல்பொருள் தளங்களை முகைமத்துவம் செய்யும் ஜனாதிபதி செயலணியின் தலைவரான பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அம்பாறையிலுள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீகவாபி ரஜ மகா விகாரையின் மீள்கட்டுமான பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆராய்வதற்காக நேற்று அங்கு விஜயம் செய்திருந்தாார்.

இதன்போது ஊடகவியலாளர் ஒருவர் மன்னார் மாவட்டத்தில் சொருபங்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சம்பவங்கள் தொடர்பாக ஸ்ரீலங்கா பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிடம் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த அவர்,

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்ய உடனடியாக விசாரணைகளை முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். குற்றவாளிகளுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதன் மூலம் எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்.

மன்னார் வயல் வீதி பகுதியில் காணப்படுகின்ற இரு சொரூபங்களும் மன்னார் பள்ளிமுனை பிரதான வீதியில் அமைக்கப்பட்ட சொரூபம் ஒன்றும் உள்ளடங்களாக கத்தோலிக்க சிற்றாலயங்களின் மூன்று சொருபங்கள் மீது கற்கள் வீசி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மன்னார் மறைமாவட்ட முன்னாள் குருமுதல்வர் விக்டர் சோசை தொடர் மோசடியில் ஈடுபட்டதால் திருச்சபை அவரை மன்னார் மறை மாவட்டத்தால் இருந்து தூக்கி விட்ட ஆத்திரத்தால் வாங்கலையை சேர்ந்த மக்கள் மன்னாரில் உள்ள சிற்றாலயங்களை உடைத்து வருவதாக அங்கிருந்துவரும் நம்பத்தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Contact Us