நடிகை சமந்தா மற்றும் நாக சைத்தன்யாவின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் மாடலிங் துறையில் நுழைந்து மெல்ல மெல்ல தனது உழைப்பால் இப்போது முன்னணி நடிகையாக திகழ்பவர் நடிகை சமந்தா.

பல்லாவரம் பொண்ணு என தமிழ் சினிமா ரசிகர்களை செல்லமாக அவரை அழைப்பார்கள். தமிழை தாண்டி தெலுங்கிலும் ராஜஜியம் செய்கிறார். பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வசூலில் சாதனை செய்து வருகிறார்.

படங்கள், வெப் சீரிஸ் நடிப்பது, சொந்தமாக தொடங்கிய தொழிலில் கவனம் செலுத்துவது என அடுத்தடுத்து நிறைய விஷயங்கள் செய்து வருகிறார் சமந்தா.

இப்படி தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கலக்கும் நடிகை சமந்தாவின் சொத்து மதிப்பு மட்டும் -ரு 84 கோடி என கூறப்படுகிறது. அவரது கணவரும், நடிகருமான நாக சைத்தன்யாவின் சொத்து மதிப்பு ரூ. 38 கோடி என்கின்றனர்.

மொத்தமாக இருவரின் சொத்தையும் சேர்த்து ரூ. 122 கோடி சொத்து மதிப்பு கணக்கிடப்படுகிறது.

Contact Us