ஒரு நிமிஷம் நில்லுங்க’!.. கல்யாணம் முடிஞ்ச கையோட ‘மாப்பிள்ளை’ செஞ்ச செயல்.. அசந்துபோன பெண்வீட்டார்..!

திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளை செய்த ஒரு செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Kerala youth declares Big statement on wedding day

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் நூர்நாத் பகுதியை சேர்ந்தவர் கேவி சத்யன். இவரது மனைவி சரஸ்வதி. இந்த தம்பதியரின் மகன் சதீஷ். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த ராஜேந்திரன்-ஷீலா தம்பதியின் மகள் ஷ்ருதி என்பவரும் திருமணம் நிச்சயத்துள்ளனர்.

Kerala youth declares Big statement on wedding day

Kerala youth declares Big statement on wedding day

திருமணம் முடிந்து வீட்டுக்கு செல்வதற்கு முன், மணப்பெண்ணின் பெற்றோரை சதீஷ் அழைத்துள்ளார். அப்போது தனக்கு வரதட்சணையாக கொடுத்திருந்த 50 சவரன் நகையை, திரும்ப அவர்களிடமே ஒப்படைத்து, கட்டிய தாலியுடன் மனைவியை அழைத்துச் சென்றுள்ளார். தற்போது கேரளாவில் இதுதான் வைரல் டாப்பிக்காக பேசப்பட்டு வருகிறது.

Kerala youth declares Big statement on wedding day

இதற்கு காரணம் சமீபத்தில் வரதட்சணை கொடுமை காரணமாக கேரளாவில் இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார். இது கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்போது பெண்கள் பலரும் ‘நாங்கள் வரதட்சணை தர மாட்டோம்’ என புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.

Kerala youth declares Big statement on wedding day

அதேபோல், சமீபத்தில் வரதட்சணை கொடுமைக்கு எதிராக நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கேரள ஆளுநர் ஆரிஃப் முகமது கான் கலந்துகொண்டு ஆதரவு தெரிவித்தார். இந்த சூழலில் திருமண முடிந்த கையோடு, தனக்கு வரதட்சணையாக வந்த நகைகளை பெண்ணின் பெற்றோரிடமே மணமகன் திருப்பிக்கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Contact Us