பிரிட்டன் அமைச்சர்: 2 டோஸ் தடுப்பூசியும் போட்டுட்டேன்…. ஆனால் கொரோனா எப்படி வந்தது என்று தெரியவில்லை

திருநெல்வேலிக்கே அல்வாவா ? திருப்பதிக்கே லட்டா ? என்று கேட்ப்பார்களே அது இது தான் போல இருக்கு. பிரித்தானிய சுகாதார துறை அமைச்சருக்கு, அதுவும் 2 டோஸ் போட்ட அமைச்சருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது என்பது, பிரித்தானியாவையே ஆட்டம் காண வைத்துள்ளது. பிரிட்டன் சுகாதார துறை அமைச்சர் சஜித் ஜாவித்துக்கு இரண்டு தவணை கொரோனா தடுப்பூசியை செலுத்தி கொண்ட பிறகு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது சனிக்கிழமை அன்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் அவர் வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து “இரண்டு தவணை கொரோனா தடுப்பூசியும் போட்டு விட்டேன். எனது பிசிஆர் முடிவுக்காக காத்திருக்கிறேன். தற்போது லேசான அறிகுறிகளே தென்படுகின்றன. தடுப்பூசி போடாதவர்கள் தடுப்பூசி செலுத்துவதில் ஆர்வம் காட்ட வேண்டும்.” என்று சஜித் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Contact Us