இவங்க கட்டாயம் இதை பண்ணனும் …. தளர்த்தப்பட்ட கட்டுப்பாடுகள் …. பிரிட்டன் அரசு அதிரடி ….!!!

பிரிட்டனில் வருகின்ற 19-ஆம் தேதி முதல் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட உள்ள நிலையில் பிரான்ஸ் நாடு மட்டும் இந்த தளர்வில் இருந்து ஓரம்கட்டபட்டுள்ளது . அதாவது வருகின்ற 19ஆம் தேதி முதல் பிரிட்னில் ஆம்பர் பட்டியலில் இருக்கும் நாடுகளிலிருந்து வரும் பயணிகள் 2 டோஸ் தடுப்பூசியும் செலுத்திக் கொண்டால் அவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டிய அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது.

 ஆனால் பிரான்ஸ்நாட்டில் இருந்து வரும் பயணிகள்  2 டோஸ் தடுப்பூசி செலுத்தி கொண்டாலும் கூட அவர்கள் 10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என என்று அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.மேலும் பிரான்சில் பீட்டா வகை கொரோனா  வைரஸ் தொற்று அதிகம் பரவி வருவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இதில் கடந்த வாரத்தில் பிரான்ஸ் நாட்டில் 27,713 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது .ஆனால் அதேசமயம் பிரிட்டனின் 2,44,691  பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Contact Us