மகாராணி முன் நிலையில் பெயர் சூட்டுவேன் அடம் பிடிக்கும் ஹரி-மேகான் தம்பதிகள் என்ன தான் நடக்கிறது ?

பிரித்தானிய இளவரசர் ஹரியும், அவரது மனைவி மேகனும் ராஜ குடும்பத்துடன் மீண்டும் சேர பல முயற்சிகளை செய்கிறார்கள். அந்த வகையில் பிரித்தானிய மகாராணியார் முன்னிலையில் தங்களது இரண்டாவது குழந்தையான லிலிபெட்டுக்கு பெயர் சூட்டும் விழா விண்ட்சர் மாளிகையில் தான் நடக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துள்ளனர். மேலும் ஹரி இளவரசி டயானாவின் சிலை திறப்பு விழாவிற்கு சென்றிருந்தபோது இது குறித்து பேசியதாகவும் கூறப்படுகிறது.

அதேசமயம் விண்ட்சர் மாளிகையில் தான் ஹரி-மேகன் தம்பதியரின் முதல் மகன் ஆர்ச்சியின் பெயர் சூட்டும் விழா நடைபெற்றது. ஆனால் அதில் மகாராணியார் பங்கேற்கவில்லை. எனவே தங்களது மகள் லிலிபெட்க்கு பெயர் சூட்டும் விழா விண்ட்சர் மாளிகையில் தான் கொண்டாடப்பட வேண்டும். அதுவும் பிரித்தானிய மகாராணியார் முன்னிலையில் விழா நடைபெற வேண்டும் என்று ஹரி-மேகன் தம்பதியினர் கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Contact Us