பணி நேர SHIFT-ஐ மாற்றுவதில் தகராறு’!.. ஊழியரின் வேலைக்கு உலை வைத்த பன்னாட்டு நிறுவனம்!.. ரூ. 932 கோடி நஷ்டஈடு கொடுக்க உத்தரவு!

டவுன் சிண்ட்ரோம் நோயினால் பாதிக்கப்பட்ட பெண் ஊழியரை நீக்கியதற்காக வால்மார்ட் கடுமையான எதிர்வினையை சந்தித்துள்ளது.

walmart fired employee with down syndrome 125 million fine

மார்லோ ஸ்பெத் என்ற பெண், டவுன் சிண்ட்ரோம் (down syndrome) நோயினால் பாதிக்கப்பட்டவர். அவர் வால்மார்ட் நிறுவனத்தில் 16 ஆண்டுகள் ஊழியராக பணிபுரிந்து வந்துள்ளார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, அமெரிக்க பன்னாட்டு நிறுவனமான ‘வால்மார்ட்’ பதினாறு ஆண்டுகள் பணி செய்த பெண் ஊழியரை பணி நீக்கம் செய்தமைக்காக 125 மில்லியன் (ரூ.932 கோடி) அமெரிக்க டாலர்களை அவருக்கு செலுத்த வேண்டும் என அமெரிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஊழியர் நலன் சார்ந்த சட்ட ரீதியாக இந்த நடவடிக்கையை நீதிமன்றம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Contact Us