“தன்னுடன் செல்பி எடுக்க 100 ரூபாய்”; மந்திரியின் அதிரடி அறிவிப்பு!

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. அம்மாநிலத்தின் சுற்றுலா மற்றும் கலாசார துறை மந்திரியாக உஷா தாகூர் உள்ளார். அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறுவதை வாடிக்கையாகக் கொண்ட இவர், தற்போது தன்னுடன் செல்பி எடுக்க விரும்புவோர் ரூ.100 செலுத்த வேண்டும் எனக் கூறி சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார்.

மத்தியப் பிரதேசம் மாநிலம் கந்துவாவில் செய்தியாளர்களிடம் பேசிய உஷா தாகூர் கூறுகையில், செல்பி எடுப்பதால் அதிக நேரம் வீணாகிறது. இதனால், அடிக்கடி எங்களது நிகழ்ச்சிகளில் பலமணி நேரம் தமாதம் ஆகிவிடுகிறது. எனவே இனி யார் செல்பி எடுத்தாலும் 100 ரூபாயை கட்சியின் உள்ளூர் பிரிவில் செலுத்தவேண்டும்.

கட்சிப் பணிகளுக்கு இந்த தொகை பயன்படுத்தப்படலாம். அதுபோல பூக்களுடன் வரவேற்பதைப் பொறுத்தவரை , லக்ஷ்மி தேவி பூக்களில் வசிக்கிறார் என்று நாங்கள் நம்புகிறோம்.

எனவே அனைத்து பாவங்களிலிருந்தும் விடுபட்ட பகவான் விஷ்ணுவைத் தவிர வேறு யாருக்கும் பூக்களை ஏற்றுக்கொள்ள உரிமை இல்லை. எனவே நான் பூக்களை ஏற்கவில்லை. பிரதமர் கூட பூக்கள் வேண்டாம், புத்தகம் கொடுங்கள் என்று வலியுறுத்தியுள்ளார்” என்று வலியுறுத்தியுள்ளார்.

அண்மையில் இவர், கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் பெற்ற மக்கள் பிஎம் கேர் நிதிக்கு 500 ரூபாய் நன்கொடையாக வழங்க வேண்டும் என்று கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

Contact Us