பிள்ளையான் மற்றும் வியாழேந்திரனுக்கு பகிரங்க சவால்!

கல்வி குறித்து விவாதிக்க வருமாறு ஸ்ரீலங்கா இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பிள்ளையானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கல்வியை வியாபாரமாக்கிய வியாழேந்திரனும் பல கல்விமான்களை கிழக்கு பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேற்றிய பிள்ளையானும் கல்வியை அரசியல் மயப்படுத்தியதாக இலங்கை ஆசிரியர் சங்க மாவட்ட செயலாளர் பொ.உதயரூபன், குற்றம் சுமத்தியுள்ளார்.

மட்டக்களப்பு ஊடக மையத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்திய அவர், கல்வியை இலவசமாக வழங்க வேண்டிய ஸ்ரீலங்கா அரசாங்கம், இராணுவ மயமாக்கல் நிகழ்வுகளில் ஈடுபடுவதாகவும் விமர்சித்துள்ளார்.

Contact Us