13 வயது சிறுமியை கடத்தி வல்லுறவு செய்த பௌத்த பிக்கு

13 வயது சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய மற்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கிய தொடர்பில் கைதுசெய்யப்பட்ட பௌத்த பிக்கு உள்ளிட்ட நால்வரை விளக்கமறியலில் வைக்குமாறு அத்தனகல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார். சந்தேகநபர்களை அடுத்த மாதம் 2ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

ராஜகிரிய பிரதேச விகாரை ஒன்றின் பிக்கு உள்ளிட்ட நால்வர் இவ்வாறு கைது செய்யப்பட்டனர். வெயங்கோட பகுதியைச் சேர்ந்த குறித்த சிறுமிக்கு வரம் தருவதாக கூறியே சிறுமியை கடத்தி சென்றுள்ளனர்.

Contact Us