பிரான்சில் இருந்து டோவர் வந்து குவியும் அகதிகள்: இதுவரை 8,000 பேர் கால்வாயை தாண்டியுள்ளார்கள் !

பிரான்சில் கலையில் உள்ள கடல்கரை ஓரமாக, சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட அகதிகள் முகாமிட்டுள்ளார்கள். அவர்கள் கள்ளத் தோணிகளை பிடித்து, ஆங்கிலக் கால்வாயை கடந்து ஒவ்வொரு நாளும் பிரித்தானியாவுக்குள் வந்து கொண்டு இருக்கிறார்கள். இதனை பிரான்ஸ் நாடு கருத்தில் கொள்ளவில்லை. எனக்கு என்ன என்று விட்டு விட்டது. நேற்றைய தினம் 100 பேர் இன்று காலை 7.30 மணிக்கு 20 பேர் என்று, பிரான்ஸ் அகதிகள் கடல் வழியாக டோவர் வந்தடைந்த வண்ணம் உள்ளார்கள். மொத்தமாக சில நாட்களில் மடும் 8,000 பேர் இவ்வாறு கடல் வழியாக பிரித்தானியாவுக்குள் வந்து விட்டதாக அரசு தெரிவித்துள்ளது. இதனை அடுத்து கடுமையான நடவடிக்கையில் இறங்க.,,,

பிரித்தானிய அரசு திட்டங்களை தீட்டி வருகிறது. பிரான்ஸ் அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்த அடிப்படையில், 54 மில்லியன் பவுண்டுகளை பிரித்தானிய அரசு பிரான்சுக்கு கொடுத்து. பிரான்ஸ் எல்லைப் படையை, கண்காணிகச் சொன்னது. ஆனால் காசையும் வாங்கிக் கொண்டு இறுதியாக களற்றி விட்டது பிரான்ஸ்.

Contact Us