ஜப்பான் நாடு சின்னாபின்னமாகும்.. சீன அரசு பகிரங்க எச்சரிக்கை..!!

சீனாவை எதிர்த்து ஜப்பான் அரசு ஒரு ராணுவ துருப்பை தைவான் நாட்டிற்கு அனுப்பினால் கூட ஜப்பான் ஒட்டுமொத்தமாக தகர்க்கப்படும் என்று காணொளி மூலமாக எச்சரித்துள்ளனர். சீன ராணுவம் குறித்த தகவல்களை வெளியிட்டு வரும் ஒரு குழுவினர் இந்த காணொளியை உருவாக்கியுள்ளார்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன்பாக ஜப்பான் நாட்டை எச்சரிக்கும் இந்த காணொளி வெளியிடப்பட்டது.  இதற்கு மில்லியன் கணக்கான சீன மக்கள் ஆதரவு தெரிவித்தார்கள். எனினும் இணையதளத்திலிருந்து இந்த காணொளி சில பிரச்சனைகளால் நீக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் சீனாவின் அதிகாரிகள் அதே காணொளியை மீண்டும் இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்கள்.

Contact Us