மரண தண்டனை கைதிக்கு பொது மன்னிப்பு – ஹிருணிகா அடிப்படை உரிமை மனு தாக்கல்

பாரத லட்சுமண் பிரேமச்சந்திரவின் படுகொலை தொடர்பாக மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஸனாதிபதி பொது மன்னிப்பு வழங்கியமை அரசியலமைப்பிற்கு அப்பாற்பட்ட நடவடிக்கை எனக் கூறி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.மேலும், மரண தண்டனை விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு மன்னிப்பு வழங்குவதற்கான ஜனாதிபதியின் உத்தரவை ரத்து செய்யுமாறு ஹிருணிகா பிரேமச்சந்திர தனது மனுவில் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டமா அதிபர், நீதி அமைச்சர் அலி சப்ரி, ஜனாதிபதி சார்பாக பதிலளித்தவராக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தொழிற்சங்க ஆலோசகரான பாரத லட்சுமண பிரேமச்சந்திராவை சுட்டுக் கொன்ற வழக்கில் கொழும்பு உயர்நீதிமன்றத்தில் துமிந்தா சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது என்று மனுதாரர் சுட்டிக்காட்டுகிறார்.

அரசியலமைப்பின் விதிகளை பின்பற்றாமல் இதுபோன்ற மன்னிப்பு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளதாக ஹிருணிகா தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

Contact Us