கொரோனாவை கொடுத்து சக்த்தி TVயை கைப்பற்ற முயற்ச்சியா ? ராஜா மகேந்திரன் இறப்புக்கு பின்னால்….

கெப்பிடல் மகாராஜா கூட்டு நிறுவனங்களின் தலைவர் ஆர். ராஜா மகேந்திரன் இன்று (25) காலை காலமானார் என அதிர்வு இணையம் அறிகிறது. இவர் நவலோகா வைத்தியசாலையில், கடந்த 12 நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு கொரோனா தொற்று இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என மேலும் அறியப்படுகிறது. மிகவும் பாதுகாப்பாக இது நாள் வரை இருந்து வந்த ராஜா மகேந்திரனுக்கு, எப்படி கொரோனா தொற்றியது என்பது பெரும் கேள்விக் குறியாக உள்ளது. சக்தி TV உட்பட இலங்கை உள்ள பல கம்பெனிகளின் உரிமையாளராக இருந்தவர் இவரது அண்ணா. மகாராஜா என்ற நிறுவனத்தை அண்ணாவின் முதல் பெயரையும் தனது பெயரையும் இணைத்தே மகாராஜா என்று வைத்தார்கள் இந்த சகோதரர்கள். பின்னர் அவரிடம் இருந்து, அனைத்து நிறுவனங்களையும் படிப்படியாக பெற்றவர் தான் இந்த, ராஜா மகேந்திரன் . உண்மையில் சொல்லப் போனால் உழைப்பால் உயர்ந்த மனிதர்… சந்திரிக்கா அரசு டயலக் கம்பெனியை இவர்களிடம் இருந்து பறித்து அரச உடமையாக்க முற்பட்டவேளை…

அதீத புத்தியை பாவித்து காப்பாற்றியவர் ராஜா மகேந்திரன் அவர்கள் தான். தற்போது அவர் மறைவுக்கு பின்னால், சக்தி TVஐக் கைப்பற்ற கோட்டபாய முயற்ச்சிக்க கூடும் என்று கூறப்படுகிறது. காரணம் அவரது அண்ணா,  முதல் கொண்டு ராஜா மகேந்திரன் வரை அனைவருமே UNP ஆதாரவாளர்கள் தான். இன் நிலையில் ராஜா மகேந்திரனின் மகன் அனைத்து பொறுப்புகளையும் ஏற்க்க உள்ளதாக அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. இக்கட்டான இந்த சூழ் நிலையில், அவரது உடல் இன்று தகனம் செய்யப்பட்டுள்ளது. அவர் இன்று காலை நவலோகா தனியார் வைத்தியசாலையில் இறந்தார். இன்று மாலையே உடல் தகனம் செய்யப்பட்டும் உள்ளது.

கொரோனா தொற்று எவ்வாறு ஏற்பட்டது என்பது தான் மிக மிக சந்தேகமாக உள்ளது என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்களில் பேச்சு அடிபட்டு வருகிறது.

Contact Us