பட்டபகலில் பெண்ணை கொடூரமாக தாக்கிவிட்டு, கொள்ளையிட்டு தப்பிய நபர்….

 

பட்டபகலில் பெண்ணை கொடூரமாக தாக்கிவிட்டு, கொள்ளையிட்டு தப்பிய நபரை ரொறன்ரோ பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர். கடந்த 4ம் திகதி சுமார் 6.30 மணியளவில் ஓல்ட் வெஸ்டன் சாலை மற்றும் செயின்ட் கிளெய்ர் அவென்யூ மேற்கு பகுதியில் குறித்த சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்தின் போது குறித்த பெண்ணை எட்டித் தள்ளிய அந்த நபர், அவரது முகத்தில் ஆவேசமாக குத்தியுள்ளார். பின்னர் கழுத்தை நெரித்து அவர் மூர்ச்சையாகும் வரை தாக்கியுள்ளார்.

சில நிமிடங்களுக்கு பின்னர் குறித்த பெண் கண் திறக்கவும், மீண்டும் முகத்தில் தாக்கியுள்ளார். பின்னர் அந்த பெண்ணின் குடியிருப்பில் புகுந்து மொத்தமும் சேதப்படுத்திவிட்டு கொள்ளையிட்டும் சென்றுள்ளார்.

முதற்கட்ட விசாரணையில், இருவரும் ஏற்கனவே நன்கு அறிமுகமானவர்கள் என்றே தெரிய வந்துள்ளது. தற்போது இந்த விவகாரம் தொடர்பில் 34 வயதான Du Van Duong என்பவரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஒஷாவா பகுதியில் அவர் பதுங்கி இருக்க வாய்ப்புள்ளதாகவும், பொதுமக்கள் இந்த விவகாரத்தில் பொலிசாருக்கு உதவ வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Contact Us