‘எங்க கடற்படை அட்டேக் பண்றப்போ…’ ‘எந்த நாடும்’ நின்னு சமாளிக்க முடியாது…! – கடும் எச்சரிக்கை விடுத்த ‘நாட்டின்’ அதிபர்…!

தங்கள் நாட்டின் கடற்படையை எந்தவித நாட்டின் கடற்படையாலும் தோற்கடிக்க முடியாது என ரஷ்ய அதிபர் புதின் (Putin) கர்வத்தோடு தெரிவித்துள்ளார்.

Vladimir Putin Russian navy capability repel any attack

ரஷ்ய அதிபர் புதின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்-ல் (Saint Petersburg) நட்பு நாடுகள் கலந்துகொண்ட கப்பல்படை அணிவகுப்பு விழாவில் கலந்துக்கொண்டுள்ளார்.

Vladimir Putin Russian navy capability repel any attack

அப்போது அந்த விழாவில், அனைத்து நாடுகளின் நீர்மூழ்கி கப்பல் மற்றும் இந்தியா உட்பட இதர நாடுகளின் போர் கப்பல்களின் அணிவகுப்பும் நடத்தப்பட்டது.

Vladimir Putin Russian navy capability repel any attack

கப்பல் படை அணிவகுப்பு விழாவின் இறுதியில் பேசிய புதின் ரஷ்ய கடற்படையை புகழ்ந்து பேசினார். அப்போது, ‘ரஷ்ய கடற்படை கடலுக்கு அடியில், கடலுக்கு மேல் மற்றும் வான்வழி என்று எப்படி தாக்குதல் நடத்தினாலும், அதை கண்டறிந்து எதிரிகள் தடுக்க முடியாத அளவுக்கு திருப்பி தாக்கும் வல்லமை உடையதாக உள்ளது’ என எச்சரித்து பேசினார்.

Vladimir Putin Russian navy capability repel any attack

புதினின் இந்த பேச்சு, சில வாரங்களுக்கு முன்பு பிரிட்டனுக்கு சொந்தமான போர்க்கப்பல் ஒன்று சர்ச்சைக்குரிய கிரைமியா (Crimea) தீபகற்பத்தை கடந்து சென்ற நிலையில் அவர்களுக்கு இது எச்சரிக்கையாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது.

Contact Us