பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசையில் நபர் செய்த செயல்; அதிர்ச்சியில் பொலிஸார்!

புதுச்சேரியில் பணக்காரர் ஆக வேண்டும் என்ற ஆசையில் வீட்டு வாசலில் கஞ்சா செடி வளர்த்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

புதுச்சேரியில் நகரம் மற்றும் கிராமப்புற பகுதிகளில் கஞ்சா விற்பனை அமோகமாக நடக்கிறது. இதனை இரும்பு கரம் கொண்டு அடக்க காவல் துறைக்கு உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் உத்தரவிட்டார். எந்த நிலையிலும் புதுச்சேரிக்குள் கஞ்சா வர கூடாது.மீறி வந்தால் கடும் தண்டனை விதிக்க காவல் துறைக்கு உத்தரவிட்டார்.இதன் அடிப்படையில் “ஆபரேஷன் விடியல்” என்ற பெயரில் கஞ்சா விற்பனையை ஒழிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

எந்தந்த பகுதியில் கஞ்சா விற்கப்படுகிறது என்பதை ரகசியமாக பட்டியல் எடுத்த போலீசார் தனித்தனி குழுவை கொண்டு விசாரித்து வருகின்றனர். அரியாங்குப்பம் ஆய்வாளர் தனசெல்வம் தலைமையில் போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருபவர்களை தொடர்ச்சியாக கைது செய்து வரும் நிலையில் தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்யும் போது அவர் தன்னிடம் கஞ்சா எதுவும் இல்லை என்றும் சந்தை புதுகுப்பம் பகுதியை சேர்ந்த ஞானமூர்த்தி என்பவரிடம் தான் தற்போது புதுச்சேரியில் இருக்கும் அனைவருக்கும் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஞானமுர்த்தியை பிடித்த போலீசார் அவரிடம் நடத்திய விசாரணையில், தாம் கஞ்சா அனைத்தையும் விற்று விட்டதாகவும் அதே பகுதியை சேர்ந்த நாகராஜ் என்பவரிடம் தான் கஞ்சா வாங்க செல்ல போவதாக தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து நாகராஜை பிடிப்பதற்காக அவரது வீட்டிற்கு போலீசார் சென்று சோதனை செய்த போது அங்கு கஞ்சா ஏதுவும் பிடிப்படவில்லை. ஆனால் சோதனை முடித்து வீட்டு வெளியே வந்து பார்த்த போது 12 அடியில் வித்தியாசமான ஒரு செடி வளர்ந்து இருப்பதை போலீசார் கண்டனர். அந்த செடியை ஆய்வு செய்த போது கஞ்சா செடி என தெரிய வந்தது.

இதனையடுத்து நாகராஜிடம் விசாரணை நடத்தியதில் அவர் ஞானமூர்த்தியின் அறிவுறுத்தலின் படி கஞ்சா விதைகளை வீட்டு வாசலில் நட்டு கஞ்சா செடி வளர்த்ததாகவும் தன் தாய் கேட்டதற்கு அழகு செடி வளர்பதாகவும், கஞ்சா வாங்கி விற்பததை விட தாமே செடி வளர்த்து சாகுபடி செய்து விற்பனை செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் விரைவில் பணக்காரர் ஆகிவிடலாம் என எண்ணி செடி வளர்த்ததாக ஒப்புகொண்டுள்ளார்.

தொடர்ந்து அந்த செடிகளை அழித்த போலீசார் பிடிப்பட்ட ஞானமுர்த்தி மற்றும் நாகராஜை காட்டேரிக்குப்பம் போலிசாரிடம் ஒப்படைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த காட்டேரிக்குப்பம் போலீசார் இருவரையும் கைது செய்து அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரியில் சங்கிலி தொடர் போலாகிவிட்டது கஞ்சா விற்பனை.கல்லூரி மாணவர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா விற்கப்படுவதை தடுக்க ரகசிய கண்காணிப்பை துவங்கி இருக்கிறது புதுச்சேரி காவல் துறை.

Contact Us