கடலுக்கடியில் ‘பயங்கர’ நிலநடுக்கம்…! பாதுகாப்பான இடங்களை தேடி ஓடும் மக்கள்…!

இந்தோனேசியாவில் நேற்று (26-07-2021) கடலுக்கடியில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

under sea earthquake in Indonesia shocked everyone

கடந்த ஜனவரி மாதம் இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக சுமார் 105 பேர் உயிரிழந்த சம்பவம் இன்னும் நினைவிலிருந்து மறையாத நிலையில் மீண்டும் கடலுக்கடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

வலுவான இந்த நிலநடுக்கத்தால் பெருத்த சேதம் எதுவும் இல்லை என்று தகவல் வெளியாகியுள்ளது, மேலும், சுனாமி அபாயம் எதுவும் இல்லையென இந்தோனேசிய வானிலை மற்றும் புவி இயற்பியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இருப்பினும் மக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பாதுகாப்பான இடங்களை நோக்கி சென்றுக் கொண்டிருக்கின்றனர்.

Contact Us