எனக்கு ‘இவ்வளவு பணம்’ வரப்போகுதுன்னு தெரிஞ்ச உடனே… ‘அப்படியே உறைஞ்சு போயிட்டேன்…’ – கட்டிடத் தொழிலாளிக்கு அடித்த ஜாக்பாட்…!

கேரள மாநிலம் வடகரா பகுதியில் லாட்டரி குலுக்கல் சீட்டு ஒன்றில் ரூ. 10 கோடி பரிசு விழுந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Kerala lottery ticket Shiju costs Rs. 10 crore prize fell.

கேரளாவில் வடகரா பகுதியில் கட்டிட தொழில் செய்து வருபவர் ஷிஜூ. லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உள்ள இவர் கேரள அரசின் விஷூ பம்பர் லாட்டரி குலுக்கல் சீட்டு ஒன்று வாங்கியுள்ளார்.

லாட்டரி குலுக்கல் கடந்த 22-ந்தேதி நடந்த நிலையில், ஷிஜூக்கு ரூ.10 கோடி பரிசு விழுந்ததுள்ளது. ஆனால் ஷிஜூ தான் லாட்டரி வாங்கிய தகவலை யாருக்கும் சொல்லாததால் முதல் பரிசு பெற்ற நபர் யார் என தெரியாமல் அனைவரும் தேடி வந்தனர்.

ஷிஜூ நேற்று (27-07-2021) யாருக்கும் சொல்லாமல் பரிசு விழுந்த லாட்டரி சீட்டுடன் வங்கிக்கு சென்று டெபாசிட் செய்தார். அதன்பின் தான் ஷிஜூவுக்கு கேரள பம்பர் லாட்டரியில் ரூ.10 கோடி பரிசு விழுந்தது என அனைவருக்கும் தெரியவந்தது.

இதுகுறித்து கூறிய ஷிஜூ, ‘லாட்டரி சீட்டு வாங்கும் பழக்கம் உள்ள எனக்கு இதுவரை பரிசு ஏதும் விழுந்தது இல்லை. முதல் முறை எனக்கு இவ்வளவு பெரிய தொகை பரிசாக விழும்போது என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள நேரம் தேவைப்பட்டது. ரூ.10 கோடி ரூபாய் கிடைக்க போகுது, இனி என் கஷ்டங்கள் தீர்ந்து விடும்’ எனக் கூறியுள்ளார்.

Contact Us