ஹிஷாலினியின் மரணத்தை மறைக்க சதித்திட்டம்! வெளியிடப்பட்ட தகவல்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய சிறுமியின் மரணத்தை மறைக்க சதித்திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக சிங்களே அமைப்பின் மெடில்லே பஞ்சாலோக்க தேரர் தெரிவித்துள்ளார்.

இணைய ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

சிறுமியின் மரணம் குறித்த முதல் பிரேத பரிசோதனை செல்வாக்கின் கீழ் மேற்கொள்ளப்பட்டதாகவும், தாஜுதீனின் பிரேத பரிசோதனைக்கு விசுவாசமானவர்களும் இதில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் வீட்டில் பணியாற்றிய 16 வயதான சிறுமி கடந்த 3ம் திகதி தீக்காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 12 நாட்களின் பின்னர் உயிரிழந்தார்.

Contact Us