முதலில் கட்-லெட் பின்பு சைனீஸ் நூடுல்ஸ்- சிங்களவன் எல்லாம் ஒற்றுமை தான்… நாங்க தான் …

சில தினங்களுக்கு முன்னர் ரணில் விக்கிரமசிங்ஹ, மகிந்தவை அவரது வீட்டில் சந்தித்துள்ளார். பெரும் எதிர்கள் என்றும், கீரியும் பாம்பும் என்று வர்ணிக்கப்பட்டவர்கள். அதிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு, நாம் ரணில் பக்கம் நின்றால் தான் நல்லது என்று பல தேர்தலில் தமிழர்களை ரணிலுக்கு வாக்குப் போடச் சொன்னது பலருக்கு நினைவில் இருக்கலாம். ஆனால் இது கொள்ளுக்கட்டை, அது மோதம்… இரண்டும் உருவத்தில் தான் வித்தியாசம். ஆனால் உள்ளே ஒன்று தான்… அது சிங்களம் என்ற ஒற்றுமை… மகிந்த வீட்டுக்குச் சென்ற ரணிலுக்கு முதலில் கட்-லெட் வித் சில்லி சார்சுடன் ஸ்னக்ஸ் கொடுக்கப்பட்டது. பின்னர் …

சைனீஸ் நூடுல்ஸ் கொடுக்கப்பட்டது. மகிந்தவின் மனைவியும் இதில் கலந்து கொண்டு சாப்பிட்டார்கள். பழைய நண்பர்கள் அல்லவா. பலதும் பத்தும் பேசிக்கொண்டார்கள். பாருங்கள், நாட்டின் பிரதான 2 கட்சிகள். எதிரும் புதிருமாக இருக்கவேண்டிய கட்சிகள். ஆனால் ஒட்டி உறவாடுகிறது. ஆனால் தமிழர்கள் தான் சிறு சிறு குழுக்களாக பிரிந்து, சண்டை போட்டு வருகிறார்கள். இவர்களை பார்த்தாவது நாம் திருந்த வேண்டாமா

Contact Us