அதிகரித்து வரும் வெப்ப அலை… பற்றி எரியும் காடுகள்… பிரபல நாட்டில் பரபரப்பு..!!

 

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள காடுகள் கடந்த ஜூலை மாதம் 14-ஆம் தேதி அதிக வெப்ப அலைகளின் காரணமாக தீ பிடித்து எரிந்துள்ளது. மேலும் இந்த காட்டுத்தீ பரவலாக ஏற்பட்டதால் பெரும்பான்மையான இடங்கள் பாதிப்புக்குள்ளானதாக கூறப்படுகிறது. அதோடு மட்டுமில்லாமல் இதுவரை 2.78 லட்சம் ஏக்கர் வனப்பகுதி தீயால் எரிந்துள்ளதாக கலிபோர்னியா மாகாண வனத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.

இதற்கிடையே அப்பகுதியில் காற்றும் சுமார் 64 கிலோ மீட்டர் வேகத்தில் வீசி வருகிறது. இதனால் அப்பகுதி மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பற்றி எரிந்த தீயால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து பெரும்பாலான மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மேலும் அமெரிக்காவில் சுமார் பதிமூன்று மாகாணங்களில் காட்டுத்தீ பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும், 20 ஆயிரம் தீயணைப்பு வீரர்கள் காட்டுத்தீயை அணைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Contact Us