தொடரும் வன்முறைச் செயல்கள்…. தலீபான்களின் வான்வழி தாக்குதல்…. பலியான விமான ஓட்டிகள்….!!

 

ஆப்கானிஸ்தானில் உள்ள தலீபான்கள் நடத்திவரும் தொடர்ச்சியான தற்கொலை தாக்குதலினால் நாட்டின் நிலைமை மோசமாகியுள்ளது. இதுவரை எட்டு முக்கிய ராணுவ விமானிகள் வான்வழி தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளனர். இதனை அடுத்து இறுதியாக Black Hawk ஹெலிகாப்டரின் விமானியான Hamidullah Azimi கடந்த சனிக்கிழமை அன்று வெடிகுண்டு தாக்குதலில் உயிரிழந்தார். ஏற்கனவே ஆப்கான் ராணுவம் தலீபான்களினால் ஆயுத பலத்தை இழந்துள்ள நிலையில் வான்வழி தாக்குதல் உதவியையும் இழக்கும் மோசமான நிலை உருவாகியுள்ளது. மேலும் அமெரிக்கா நேட்டோ படைகள் முற்றிலும் வெளியேறுவது அந்நாட்டு அமைதியை பாதித்துள்ளது.

இதனை தொடர்ந்து ஆப்கானிஸ்தான் நாட்டில் தலீபான்கள் அதிகமான இடங்களை தங்களின் கட்டுப்பாட்டில் கீழ் கொண்டு வந்துள்ளனர். இதுவரை மூன்று முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ளதாக அறிவித்த தலீபான்கள் தற்பொழுது மேலும் மூன்று பகுதிகளை கைவசப்படுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதுமட்டுமின்றி ஆப்கான் ராணுவத்தில் மூன்றில் ஒரு பங்கு விமானங்கள் வான்வழி தாக்குதலினால் சேதமடைந்து, உதிரிபாகங்கள் இன்றி அவை செயல்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் தலீபான்களின் அச்சுறுத்தல் காரணமாக விமான ஓட்டிகளும் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிலர் பதவியிலிருந்து விலகியுள்ளதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.

Contact Us