பெண்ணை அந்தரத்தில் தொங்க விட்டு …..மனைவியை மிரட்ட நடந்த கொடுமை

 

மகாராஷ்டிராவின் மும்பையில் மலட் பகுதியில் வசிக்கும் அஜய் கவுட், ஒரு மீடியா கம்பெனியில் ஓவியராக வேலை பார்க்கிறார் .இவரின் மனைவி பூஜா உத்திரபிரதேச மாநிலத்த்தை சேர்ந்தவர், இவர்களுக்கு 13 வயதில் ஒரு மகளும், எட்டு வயதில் ஒரு மகனுமிருக்கிறார். இந்நிலையில் அவரின் மனைவி பூஜா கணவரோடு சண்டைபோட்டு விட்டு இரண்டு வருடங்களுக்கு முன்பு தன்னுடைய தாய் வீட்டுக்கு சென்று விட்டார்.

அப்போது முதல் அவரின் மகள் மற்றும் மகனோடு அஜய் தனியாக வசித்து வந்தார். ஆனால் அடிக்கடி பூஜாவுக்கு போன் செய்து தன்னோடு குடும்பம் நடத்த வரும்படி கட்டாயப்படுத்தி சண்டை போட்டுள்ளார். ஆனால் பூஜாவுக்கு அவரோடு வாழ விருப்பமில்லை.

அதனால் கடந்த சனிக்கிழமையன்று அவரின் 13 வயது மகளை ஒரு கயிறில் கட்டி, தூக்கிலிட அவரை தூக்கு கயிறில் கட்டி தொங்க விட்டார். பிறகு அதை போட்டோ எடுத்து மனைவிக்கு அனுப்பி, குடும்பம் நடத்த வர சொன்னார். அப்போது அந்த சிறுமி வலிதாங்க முடியாமல் பயந்து போய் அலறினார். அதனால் அக்கம் பக்கத்தினர் சத்தம் கேட்டு ஓடி வந்து அந்த பெண்ணை காப்பாற்றினர். பிறகு அக்கம்பக்கத்தினர் அவர் மீது அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்கு பதிந்து அந்த அஜய்யை கைது செய்தனர்.

Contact Us