இன்னும் 2 நாளில் தங்கள் மக்களை ஆப்கானிஸ்தானிலிருந்து மீட்போம்.. பிரிட்டன் பாதுகாப்பு துறை தகவல்..!!

 

ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் பிரிட்டன் மக்களை நாட்டுக்குள் அழைத்து வந்த முதல் விமானம் நேற்று பிரிட்டன் சென்றடைந்துள்ளது. பிரிட்டன் நாட்டு மக்களுக்கு உதவி செய்த ஆப்கானிஸ்தானை சேர்ந்த மக்கள் உட்பட நாளொன்றிற்கு 1000 நபர்களை அரசாங்கம் வெளியேற்றும்.

இந்நிலையில், வரும் 31-ஆம் தேதிக்குள் ஆப்கானிஸ்தான் மற்றும் பிரிட்டன் நாடுகளை சேர்ந்த மக்களை வெளியேற்ற முடிவு எடுக்கப்பட்டிருந்தது. மேலும் பிரிட்டன் அரசு, ஆப்கானிஸ்தான் நாட்டில் இருந்து மக்களை வெளியேற்றுவதற்கு உதவி செய்ய, 600 படைகளை காபூல் நகருக்கு அனுப்பி வைத்தது.

எனினும் ஆப்கானிஸ்தானின் ஆட்சி, நினைத்ததை விட வேகமாக கவிழ்க்கப்பட்டது. எனவே, ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை திட்டத்தை நீடித்து இருக்கக்கூடாது என்ற நிலை ஏற்பட்டிருக்கிறது. எனினும், ராணுவ வீரர்கள் உதவி செய்து எப்படியோ நேற்று பிரிட்டன் மக்களும், காபூல் தூதரகத்தின் பணியாளர்களும் முதல் விமானத்திலேயே ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து இங்கிலாந்திலுள்ள Brize Norton-க்கு தரையிறங்கிவிட்டார்கள்.

ஆப்கானிஸ்தானில் நிலைமை மோசமடைந்து வரும் நிலையில், இன்னும் இரு நாட்களில் ஆப்கானிஸ்தானில் இருந்து 1500 நபர்களை வெளியேற்ற அரசு முடிவெடுத்திருப்பதாக பிரிட்டன் பாதுகாப்பு துறை அமைச்சரான பென் வாலஸ் கூறியிருக்கிறார்.

Contact Us