விளையாடிக் கொண்டிருந்த பெண்ணிடம் ஆபாச படம் காட்டி.. வலிக்கிறதென்று அழுதபோது அதிர்ந்த பெற்றோர்

 

சென்னை தண்டையார்பேட்டையில் பிஸ்கட் வியாபாரம் செய்து வந்தவர் தினேஷ். இவர் கோட்டூர்புரம் ஹவுசிங் போர்டு குடியிருப்பில் வசித்து வரும் பெண்ணை கடந்த 2019ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவர்களுக்கு 2 வயதில் குழந்தை ஒன்று இருக்கிறது.

இந்த நிலையில் மாமியார் வீட்டுக்கு அடிக்கடி செல்லும் தினேஷ் அதே குடியிருப்பில் வசித்து வரும் 21 வயது மனவளர்ச்சி குன்றிய பெண்ணுடன் பேசி பழகி வந்துள்ளார் பக்கத்து வீட்டுக்காரர் என்பதால் மாமா என்று இளம் பெண்அழைத்து வந்திருந்தார். மனவளர்ச்சி குன்றிய பெண்ணிடம் பாசமாக பழகுகிறார் என்று எல்லோரும் நினைத்த நிலையில் அந்த அதிர்ச்சி செய்தியை கேட்டிருக்கிறார்கள்.

மனைவி யுபிஎஸ்சி தேர்வுக்கான பயிற்சி வகுப்பு படிப்பதால் மாமியார் வீட்டில் கொண்டு விட்டு விட்டு அங்கேயே தங்கி இருந்திருக்கிறார் தினேஷ்.அப்போது மனவளர்ச்சி குன்றிய பெண் குடியிருப்பின் கீழே விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார். அந்த பெண்ணை குடியிருப்பின் இரண்டாவது இடத்திற்கு அழைத்துச் சென்று ஆபாச படங்களை காட்டி பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் தினேஷ்.

இதனால் சிறுமியின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தாய் கேட்டதற்கு வயிறு வலிக்கிறது, சிறுநீர் கழிக்கும் இடத்தில் வலிக்கிறது என்று சொல்லியிருக்கிறார். வழக்கம்போல் பெண்களுக்கு வரும் கோளாறு என்று சொல்லி அலட்சியமாக இருந்திருக்கிறார்கள்.

தொடர்ந்து அதையே சொல்லி அழுது கொண்டிருக்கவும், சந்தேகப்பட்ட அனைவரும் விசாரிக்க, தனக்கு நடந்ததை சொல்லி அழுருக்கிறார் அந்த மன வளர்ச்சி குன்றிய பெண். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து போலீசார் அந்த பெண்ணை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தியதில் பாலியல் வன்கொடுமை செய்து இருப்பது உறுதியானது. கற்பழிப்பு வழக்கில் கைது செய்த போலீசார் தினேஷை சிறையில் அடைத்துள்ளனர்.

Contact Us