ஆப்கானிஸ்தானில் முக்கிய தலைவரின் சிலை தகர்ப்பு…

 

ஆப்கானிஸ்தான்: ஹசாரா சமூக தலைவர் சிலை தகர்ப்பு. ஆப்கானிஸ்தானில் நிறுவப்பட்டுள்ள ஹசாரா சமூகத் தலைவரின் சிலையைத் தாலிபான்கள் வெடி வைத்து தகர்த்தனர்.

ஆப்கான் மலைப்பகுதிகளில் வாழும் ஹசாரா சமூகத்தினருக்கும், தாலிபான்களுக்கும் நெடுங்காலமாக முன்விரோதம் இருந்து வந்தது. 1995-ம் ஆண்டு ஹசாரா இனத் தலைவரான அப்துல் அலி மஸாரியைத் தாலிபான்கள் தூக்கிலிட்டனர். பிறகு அவரது நினைவாக பாமியனில் நிறுவப்பட்டுள்ள மிகப்பெரிய சிலையை தற்போது வெடி வைத்து தகர்த்தனர்.

மேலும் ஹசாரா சமூகத்தைச் சேர்ந்தவரும், சஹர்கிந்த் மாகாண பெண் ஆளுநருமான சலிமா மசாரி-யைத் தாலிபான்கள் கடத்தி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Contact Us