கழுத்தில் மஞ்சள் தாலியுடன் போட்டோ வெளியிட்ட வனிதா.. யாரை வெறுப்பேற்ற இந்த செல்பி!

வனிதா விஜயகுமார் என்ற பெயரை தெரியாதவர்களே இருக்க முடியாது. அந்த அளவிற்கு இவர் பிரபலமானவர். ஆனால் படங்களில் நடித்து பிரபலமானதைவிட சர்ச்சையில் சிக்கி பிரபலமானது தான் அதிகம். அந்த அளவிற்கு ஏராளமான சர்ச்சைகளில் சிக்கியவர் தான் வனிதா விஜயகுமார்.

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று சக போட்டியாளர்களுடன் தினமும் ஏதாவது ஒரு சண்டையில் ஈடுபட்டு வந்தார். வனிதாவிற்காகவே பிக்பாஸ் நிகழ்ச்சி டி.ஆர்.பி. ரேட்டிங்கில் டாப்பில் இருந்து வந்தது. எனவே இவரை விஜய் டிவி டி.ஆர்.பி.க்காக தொடர்ந்து தனது சேனலில் அடுத்தடுத்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க வைத்தது.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் நடுவர், குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர், பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சி என அடுத்தடுத்து அதிரடியாக வனிதாவை விஜய் டிவி களத்தில் இறக்கியது. இந்நிலையில்தான் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் நடுவரான ரம்யா கிருஷ்ணனுக்கும், வனிதாவுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, வனிதா இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

இருப்பினும் தற்போது வனிதாவிற்கு பட வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் ஒரு சில புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். தற்போது காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனுடன் இணைந்து பிக்கப் ட்ராப் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் கூட வனிதா, பவர் ஸ்டாருடன் திருமணக்கோலத்தில் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலானது.

இந்நிலையில் வனிதா தற்போது கழுத்தில் புது மஞ்சள் தாலியுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இப்புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் இதுவும் அப்படத்திற்கான ப்ரமோஷன் தான் என கூறி வருகின்றனர்.

Contact Us