ஐயோ அதெல்லாம் பொய்…. நான் பணம் எடுத்து செல்லவில்லை…. அஷ்ரப் கனி…!!!

 

ஆப்கானிஸ்தான் நாடு முழுமையாக தலிபான்கள் பிடியில் உள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் தலிபான்கள் ஆட்சி அமைக்க உள்ளனர். இதனால் தங்களுடைய உயிருக்கு பயந்து அங்குள்ள மக்கள் தங்கள் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு வெளியேறி வருகின்றனர். அதேபோன்று ஆப்கானிஸ்தான் அதிபர் அஷ்ரப் கனி தன்னுடைய குடும்பத்தினர் மற்றும் அமைச்சர்களோடு சிறப்பு விமானம் மூலம் தலைமறைவாகி ஓடிவிட்டார் என்று தகவல் வெளியானது.

பணம் நிரப்பப்பட்ட 4 கார்கள் மற்றும் ஹெலிகாப்டரோடு அஷ்ரப் கனி தப்பி ஓடிவிட்டதாக கூறப்பட்டது. இதற்கிடையில் நேற்று மத்திய கிழக்கு நாடான ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று தஞ்சம் அடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஆப்கானிஸ்தானில் ரத்தக் களரியை தடுக்கவே நாட்டை விட்டு வெளியேறினேன். பொருட்கள், பணத்தை எடுத்துச் சென்றதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று அஷ்ரப் கனி விளக்கமளித்துள்ளார். மேலும் விரைவில் நாடு திரும்ப உத்தேசித்து இருப்பதாகவும், ஆப்கான் மக்களோடு பேச உள்ளதாகவும் கூறியுள்ளார்.

Contact Us