காட்டிய கவர்ச்சிக்கு வாய்ப்பு வந்துடுச்சு.. முன்னணி நடிகருக்கு ஜோடியாக ஷிவானி நாராயணன்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலவையான விமர்சனங்களை பெற்று கடைசி கட்டத்தில் வெளியேறியவர் ஷிவானி நாராயணன். அதற்கு முன்பே விஜய் டிவியில் சில சீரியல்களில் நாயகியாக நடித்துள்ளார்.

அப்போது அவருக்கு ஒரு வரவேற்பு கிடைத்த நிலையில் அதை பயன்படுத்தி ரசிகர்களின் பார்வை தன்மேல் இருக்கவேண்டும் என்பதற்காக தினமும் மாலையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தார்.

ஒரு சில நாளில் அநியாயத்திற்கு கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். இப்படி மொத்த இளைஞர்களையும் பார்வையையும் தன் பக்கம் திருப்பி பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தவர் அவருடைய விளையாட்டை விளையாடியிருந்தால் ஜெய்த்திருப்பாரோ, என்னமோ.

தேவையில்லாமல் காதல் ரூட்டெடுக்க அதுவே அவருக்கு பின்னடைவாக அமைந்துவிட்டது. இருந்தாலும் எப்படியோ தன்னுடைய ரசிகர்களை பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியே வந்தவுடன் புகைப்படங்கள் வெளியிட்டு சமாதானப் படுத்திவிட்டார்.

ரசிகர்களை மட்டுமல்லாமல் லோகேஷ் கனகராஜையும் பயங்கரமாக சமாதானப் படுத்திவிட்டார் போல. கமல், விஜய்சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் நடிக்கும் விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக பிக்பாஸ் சிவானியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக கூறுகின்றனர்.

இது நம்ப முடியாத தகவலாக இருந்தாலும் பெரிய பத்திரிகை நிறுவனம் இந்த செய்தியை வெளியிட்டதால் ஒருவிதமான எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. எப்படியோ இன்றைய தேதிக்கு டாப் இயக்குனரின் படத்தில் வாய்ப்பு கிடைத்தால் கசக்குமா என்ன.

Contact Us