தமிழகத்தில் திரையரங்குகள் திறக்க அனுமதி.. அரசு அதிரடி உத்தரவு !

 

 

கொரானாவின் 2வது அலையின் தாக்கத்தால் கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழகத்தில் திரையரங்குகள் மூடப்பட்டு கிடக்கின்றன. தொற்று படிபடியாக குறைந்து வருவதால் ஊடரங்கிலிருந்து சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதில் திரையரங்குகளை திறப்பது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் தொடர்ந்து அரசு மௌனம் காத்து வந்தது.

இதையடுத்து கடந்த சில வாரங்களாக திரையரங்குகள் திறக்க அனுமதியளிக்கப்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனாலும் திரையரங்கு திறப்பு குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் இந்த தொழிலை நம்பியுள்ள ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரானா வழிகாட்டுதலுடன் திரையரங்குகளை திறக்க தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

theaters

சமீபத்தில் இது குறித்து அரசிடம் பரிந்துரை செய்யுமாறு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியத்தை சந்தித்து கோரிக்கை மனுவை, திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கொடுக்கப்பட்டது. இந்நிலையில் நிலைமையை சீரடைந்து வருவதால் தமிழகத்தில் ஊரடங்கில் புதிய தளர்வுகளை அளிப்பது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தலைமைச் செயலாளர், மருத்துவ வல்லுநர்கள் கலந்துக்கொண்டனர்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை அறிக்கையாக தமிழக அரசு வெளியிட்டுள்ளது. அதில் நிலையான வழிகாட்டுதலை பின்பற்றி 50 சதவீத பார்வையாளர்களுடன் வரும் ஆகஸ்ட் 23ம் தேதி முதல் திரையரங்குகள் இயங்க அனுமதிக்கப்படுவதாகவும், திரையரங்கு பணியாளர்கள் அனைவரும் கொரானா தடுப்பூசி போட்டிருப்பதை உறுதி செய்துக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Contact Us