5 வருடம் கழித்து திருட்டுப் பயலே ஜீவாவின் புதிய படம்.. லேட்டஸ்ட் அப்டேட்!

தமிழ் சினிமாவில் திருட்டுப் பயலே படம் மூலம் பிரபலமான நடிகர் தான் ஜீவன். இப்படம் மூலம் இவருக்கு கிடைத்த வரவேற்பால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருவார் என எதிர்பார்க்கப்பட்டார். ஆனால், இதனையடுத்து இவருக்கு சரியான படவாய்ப்புகள் அமையவில்லை. கிட்டதட்ட ஐந்து ஆண்டுகளை கடந்த பின்பு படவாய்ப்பு கிடைத்துள்ளது.

நடிகர் ஜீவன் தமிழ் சினிமாவில் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியான யுனிவர்சிட்டி படம் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து, நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான காக்க காக்க படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இப்படத்தில் இவரது நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, திருட்டுப் பயலே படம் மூலமாக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இப்படத்தை தொடர்ந்து வெளியான நான் அவனில்லை படமும் நல்ல வரவேற்பை பெற்றதால், ஜீவனுக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது. அதேபோல் இவரது படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உருவாக தொடங்கியது.

இருப்பினும் அதன் பிறகு ஜீவன் நடித்த படங்கள் எதுவும் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு வெற்றி பெறவில்லை. இறுதியாக 2015ஆம் ஆண்டு அதிபர் என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படமும் படுதோல்வியை சந்தித்ததால் ஜீவனுக்கு தொடர்ந்து தமிழ் சினிமாவில் படவாய்ப்புகள் அமையவில்லை.

கிட்டத்தட்ட, ஐந்து ஆண்டுகளாக எந்த ஒரு படத்திலும் வாய்ப்பு கிடைக்காத நிலையில், தற்போது ஜீவன் அசரீரி என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் ஜிகே இயக்குகிறார்.

இப்படத்திற்கான நடிகைகள், நகைச்சுவை கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கான தேர்வு நடைபெற்று வருகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் ஜீவன் நடிப்பில் உருவாகும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்திலாவது சக்சஸ் குடுங்க பாஸ்… இல்லன்னா இன்னும் எத்தனை வருஷம் ஆகும்னு தெரியாது… நீங்க தான் ஜெயிக்கும் குதிரை ஆச்சே….

Contact Us