“மெக்சிகோவில் கிரேஸ் சூறாவளி!”.. கடும் பாதிப்பால் 8 பேர் பலி.. மூவர் மாயம்..!!

 

மெக்ஸிகோவின் கிழக்கு பகுதியில் கிரேஸ் சூறாவளியால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று காலையில் இந்த சூறாவளி கரையை கடந்துள்ளது. இதனால் மணிக்கு 250 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று பலமாக வீசியுள்ளது.மேலும் வெராகுரூஸ் என்ற பகுதியில் 20-க்கும் அதிகமான நகராட்சி பகுதிகள் கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்த சூறாவளியால் 8 நபர்கள் பலியானதோடு, மூவர், மாயமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வீடுகளும், சாலைகளும் சேதமடைந்திருக்கிறது. சில பகுதிகளில் மின்தடையும் ஏற்பட்டிருக்கிறது. தற்போது, காவல்துறையினரும் இராணுவத்தினரும் இணைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

Contact Us