கனடாவில் இரவு விடுதிக்கு சென்று திரும்பியவர்களுக்கு கொரோனா பாதிப்பு

 

ஹாமில்டனில் இரவு விடுதிக்கு சென்று திரும்பியவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹாமில்டனில் உள்ள Sizzle இரவு விடுதியில் இருந்தே பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை 9 பேர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து, ஆகஸ்டு 7,13 அல்லது 14ம் திகதிகளில் குறிப்பிட்ட இரவு விடுதிக்கு சென்றவர்கள் உடனடியாக கொரோனா சோதனை முன்னெடுக்க வேண்டும் என ஹாமில்டன் பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய இரவு விடுதியில் ஊழியர்கள் மத்தியில் எத்தனை பேர்களுக்கு பாதிப்பு மற்றும் வாடிக்கையாளர்களில் எத்தனை பேர்களுக்கு பாதிப்பு என்பதை அதிகாரிகள் இதுவரை வெளியிடவில்லை.

ஒன்ராறியோவை பொறுத்தமட்டில் ஜூலை 16ம் திகதி முதலே இரவு விடுதிகள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் கொரோனா சோதனை முடித்துக் கொண்ட 250 வரையான வாடிக்கையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Contact Us