“மோகம் தீர்ந்ததும் சோகம்” -புதிதாக கல்யாணமாகி வந்த பெண்ணுக்கு ஆசிட் மூலம் நடந்த கொடுமை

 

மத்தியப் பிரதேசத்தின் குவாலியரைச் சேர்ந்த சசி என்ற 20 வயதான பெண் இந்த ஆண்டு ஏப்ரல் 17 அன்று குவாலியரில் உள்ள டாப்ராவில் வசிக்கும் வீரேந்திர ஜாதவ என்பவரை மணந்தார். அவர்களுக்கு திருமணமானதும் அந்த பெண்ணின் கணவர் மற்றும் மாமியார் வரதட்சணை கேட்டு அந்த பெண்ணை கொடுமை படுத்தினார்கள் .அதனால் ஜூன் 27 அன்று, அவருடைய கணவன் அந்த பெண்ணின் தந்தையிடம் ரூ .3 லட்சம் தரும்படி கேட்டார் .ஆனால் சசி அவரின் கோரிக்கையை நிராகரித்தார் .அதனால் கோபம் கொண்ட அந்த கணவரும் மாமியாரும் அந்த பெண்ணின் வாயில் ஆசிடை ஊற்றினார்கள்

பின்னர் அவரின் உறவினர்கள் சசியை சிகிச்சைக்காக குவாலியரில் உள்ள மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர் . அங்கு அவரது உடல்நிலை மோசமடைந்தபோது, ​​அவர் டெல்லியில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். பிறகு 50 நாட்களுக்கு மேல் உயிருக்கு போராடிய அவர் உயிரிழந்தார். .அவர் உயிரிழப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, ஒரு வீடியோ செய்தியைப் பதிவு செய்தார், அதில் அவர் “யாரையும் விட்டுவிடாதீர்கள்” என்று போலீஸை வலியுறுத்தினார்.அதனால் காவல்துறையினர் அந்த கணவர் மற்றும் அவரின் உறவினர்கள் அனைவர் மீதும் வழக்கு பதிந்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Contact Us