கந்தகாரில் சிக்கிய 20 பிரிட்டன் வீரர்களை ரகசியமாக பாலைவனத்தில் ஹேக்குலீஸ் பிளேனை இறக்கி மீட்ட SAS படை கசிந்த புது தகவல் இதோ…

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் நடந்த படு பயங்கரமான ஆப்பரேஷ் ஒன்று இது தான். அமெரிக்கா மிகவும் ரகசியமாக பிரித்தானியாவுக்கு மட்டும் அறிவித்து விட்டு இறங்கிய நடவடிக்கை. ஆப்கான் நாட்டின் பல பகுதிகளை திடீர் திடீரென கைப்பற்றி வரும் தலிபான்களை எதிர்த்து இன்னும் சில நகரங்கள் தங்களை பாதுகாத்து வருகிறது. அதில் ஒன்று தான் கந்தகார் நகரம். அங்கே கடந்த பல தினங்களுக்கு முன்னரே, தலிபான்கள் அன் நகரை சூழ்ந்து விட்டார்கள். ஆனால் அங்குள்ள இளைஞர்கள் ஆயுதம் ஏந்தி போராடி வருகிறார்கள். இன் நிலையில் சற்றும் எதிர்பாராமல் முன்னேறிய தலிபான்கள், கந்தகார் நகரை சுற்றிவளைத்த இடத்தில் 20 பிரித்தானிய படைகள் சிக்கிக் கொண்டார்கள். ஆனால் அவர்கள் அதனை யாருக்கும் சொல்லவில்லை. ரகசிய சமிஞ்சை மூலம் தாம் சிக்கியுள்ள விடையத்தை காபூல் தலைமைக்கு அறிவித்தார்கள் பிரித்தானிய படைகள். இவர்களை எப்படி மீட்ப்பது என்பது பெரும் சிக்கலாக இருந்தது… ரகசிய திட்டங்களும் தீட்டப்பட்டுக் கொண்டு இருந்தது… இன் நிலையில்…

கந்தகார் மக்கள் குறித்த 20 பிரிட்டன் ராணுவ வீரர்களையும் பாதுகாத்து வந்துள்ளார்கள். அன் நகரில் இருந்து எந்த தகவலும் தலிபான்களுக்கு செல்லவில்லை. சென்றிருந்தால் தலிபான்கள் மூர்கமாக தாக்கி நகரை கைப்பற்றி, இவர்களை கைதிகளாக பிடித்து இருப்பார்கள். இன் நிலையில் கடந்த 2 தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவின் துப்புக் காவி விமானமான ஹேர்குலிஸ் விமான திடீரென எஸ்.ஏ.எஸ் சிறப்பு படைப் பிரிவு ஒன்றை ஏற்றிக் கொண்டு, தனது டுபாய் தளத்தில் இருந்து கந்தகார் நோக்கி விரைந்தது. கும் இருட்டில் குறித்த விமானம் கந்தகாருக்கு அருகே உள்ள பாலை வனப் பகுதி ஒன்றில், இறங்கியுள்ளது. இந்த விமானத்திற்கு ஓடு தளம் தேவை இல்லை. செங்குத்தாக தரை இறங்க வல்லது.

இதனை அடுத்து அதில் இருந்து குதித்த ஸ்பெஷல் படைப் பிரிவு, கந்தகார் நோக்கி நகர்ந்தது. இரவோடு இரவாக 20 பிரிட்டன் நாட்டு வீரர்களையும் மீட்டு அவர்களை அழைத்து வந்து விமானத்தில் ஏற்றி, மீண்டும் பறந்து டுபாய் வந்து விட்டார்கள். இந்த ஆப்பரேஷன் வெற்றிகரமாக முடிந்த பின்னரே அமெரிக்கா மற்றும் பிரித்தானியா இன்று தகவலை கசிய விட்டுள்ளார்கள். பிரித்தானிய படைகள், ஆப்கான் நாட்டில் ஆற்றிய சேவை மிக முக்கியமானதொன்றாகும். பிரித்தானிய படைகளின் புலனாய்வுப் பிரிவே ஆப்கான் நாட்டில், பல உதவிகளை அமெரிக்க படைகளுக்கு வழங்கி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.  வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.

Contact Us