இனி எப்படி இடியப்பமும் சொதியும் கொடுப்பேன் ? என்று கண் கலங்கிய லண்டன் தமிழர்.. சிலர்…

முன் நாள் வெளியுறவுத்துறை அமைச்சரும், நல்ல தண்ணிச் சாமியுமான மங்கள சமரவீர சற்று முன்னர் கொரோனா தொற்றுக் காரணமாக உயிர் இழந்தார் என்ற செய்தி வெளியாகியதை அடுத்து, லண்டனில் உள்ள சில தமிழர்கள் கதி கலங்கி விட்டார்களாம். இவர்கள் வேறு யாரும் இல்லை, லண்டனுக்கு மங்கள சமரவீர வந்தால்,  வீட்டுக்கு அழைத்து இடியப்பம் சொதி கொடுத்து, பின்னர் சிவப்பு வைன் அடித்துக் கொண்டு தமிழர் உரிமை பற்றி பேசுகிறோம் என்று தெரிவித்து வந்த நபர்கள் தான்.. இவர்கள் சில… பல அமைப்பைச் சார்ந்தவர்கள் என்பது பலருக்கும் தெரியும். ஏதோ மங்கள சமரவீர ஊடாக காய் நகர்த்தி தமிழர்களுக்கு தனி நாடு பெற்றுக் கொடுக்கப் போகிறோம் என்று பெரும் பீலா காட்டி வந்த நபர்கள் தான்…. ஆனால் இன்று…

செய்தி கேட்டதும் கதி கலங்கிப் போய்விட்டார்களாம். மங்கள சமரவீர ஐக்கிய தேசிய கட்சியில் ரணிலோடு இருந்து கருணாவைப் பிரித்த வேலை முதல் கொண்டு அனைத்திற்கும் தூபமிட்டவர் என்பதனை யாரும் மறந்து விட முடியாது. பின் நாட்களில் ஏதோ திருந்திய மனிதர் போல காண்பித்து, வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் சிலரை தனது வலையில் சிக்கவைத்தார்.

அவர்கள் ஊடாக பல தகவல்களை பெற்று, செயல்பட்டு வந்தவர். அமெரிக்காவின் செல்லப் பிள்ளை. இதனால் அமெரிக்க தூதரகமும் இரங்கல் அறிவித்தலை இனி விடும். இனி யாருக்கு இடியப்பம் சொதி கொடுக்க இந்த தமிழர் தரப்பு இருக்கிறதோ தெரியவில்லை.

Contact Us