பிக் பாஸ் சீசன் ஐந்தில் கலந்து கொள்ளப்போகும் முக்கிய பிரபலங்கள்.. எதிர்பார்ப்பை கிளப்பிய அப்டேட்.!

 

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கி வந்த பிக்பாஸ் 4 சீசன் வெற்றிகரமாக நடந்து முடிந்துள்ள நிலையில், ஐந்தாவது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. முதல் 3 சீசனில் இருந்த சுவாரஷ்யம் 4வது சீசனில் இல்லை என்பதே ரசிகர்களின் பெரிய குற்றச்சாட்டாக இருந்தது. அதையெல்லாம் சரி செய்யும் வகையில், பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சிக்கான போட்டியாளர்களை கவனத்துடன் தேர்வு செய்து வருகிறதாம் விஜய் டிவி நிறுவனம். இதுவரை பல பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதில் சிலரை தேர்வு செய்துள்ளதாகவும் தகவல் வந்துள்ளது.

அவர்களில் முக்கியமாக, குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து கனி, சுனிதா, கவர்ச்சி நடிகை சகிலாவின் மகள் மீலா, பாபா பாஸ்கர் போன்றோரிடம் பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தில் உள்ளதாக தெரிகிறது.

இவர்களைத் தொடர்ந்து ஜி.பி முத்து, சார்பட்டா பரம்பரை படத்தில் டாடி கதாபாத்திரத்தில் நடித்த ஜான் விஜய், பிரபல நடிகை ஐஸ்வர்யா, கடந்த சீசனில் கலந்துகொண்ட சம்யுக்தா என்பவரின் தோழி ப்ரதாயினி மற்றும் தென்மேற்கு பருவக்காற்று பட நடிகை வசுந்தரா ஆகியோரிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த சீசனுக்கான புரமோஷன் சூட் இன்று நடைபெற உள்ளது. இதில் கமல்ஹாசன் கலந்துகொள்ள உள்ளார். இதைத்தொடர்ந்து இந்த வார இறுதியில் ஒரு முக்கியமான அப்டேட்டை வெளியிட உள்ளதாம் பிக்பாஸ் குழு. அநேகமாக அது டீசராக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சீசனில் லோகோவும் மாற்றப்படுகிறதாம். மேலும், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பிக்பாஸ் சீசனை விறுவிறுப்பாக்க இந்த சீசனில் சில புதிய மாற்றங்களையும் கொண்டுவரப்போகிறார்களாம்.

Contact Us