புதிதாக பிறந்த பச்சிளம் குழந்தை… தாயின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற சோகம்… இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!!

வடக்கு அயர்லாந்தில் உள்ள லண்டன்பெர்ரியில் வசித்து வந்த சமந்தா வில்லிஸ் (35) எனும் பெண் நிறைமாத கர்ப்பிணியான இருந்துள்ளார். இந்நிலையில் தடுப்பூசி போடாததால் கொரோனா தொற்றால் கடந்த 16 நாட்களாக அவதிப்பட்டு வந்துள்ளார். இதையடுத்து சமந்தாவுக்கு அல்ட்னாகேள்வின் எனும் மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது.

ஆனால் சமந்தா கொரோனா தொற்று காரணமாக அந்த குழந்தையை கையில் வாங்கிய பார்க்க இயலாத நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார். அதனைத்தொடர்ந்து திங்கட்கிழமை அன்று சமந்தாவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றுள்ளது. அப்போது புதிதாக பிறந்த அந்த பச்சிளம் குழந்தை தனது தாயின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளது. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

Contact Us