காபூலில் பரபரப்பு…. பிரித்தானியா இளைஞருக்கு…. கொலை மிரட்டல் விடுத்த தலீபான்கள்….!!

 

ஆப்கானிஸ்தான் முழுவதையும் தலீபான்கள் கடந்த 15 ஆம் தேதி கைப்பற்றியுள்ளனர். இதனால் ஆட்சி அதிகாரம் முழுவதும் தலீபான்களின் வசம் சென்றுள்ளது. அதனால் தலீபான்களின் ஆட்சி பிடியில் சிக்கி விடக்கூடாது என்று ஆப்கானிஸ்தானை சேர்ந்த மக்கள் தங்கள் உயிருக்கு பயந்து தொடர்ந்து நாட்டை விட்டு வெளியேறி வருகின்றனர். இதன் காரணமாக காபூல் விமான நிலையத்தில் அலைமோதும் மக்கள் கூட்டத்தினால் அங்கு பரபரப்பான சூழல் தொடர்ந்து நிலவி வருகின்றது. இந்த நிலையில் காபூல் விமான நிலையத்திற்குள் நுழைய முயன்ற பிரித்தானிய இளைஞர் ஒருவருக்கு கடவுச்சீட்டு இல்லையென்றால் சுட்டுக்கொன்றிருப்பேன் என தலீபான்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த இளைஞர் 25 வயதுடைய பிரித்தானியா மருத்துவ மாணவர் ஆவார். இவர் காபூல் விமான நிலையத்தில் நடக்கும் கொடூரமான சம்பவங்கள் அனைத்தையும் வெளிப்படுத்தி வந்துள்ளார். இதுக்குறித்து அந்த இளைஞர் கூறியதாவது “தலீபான்களின் ஆட்சிக்கு பயந்த மக்கள் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற காபூல் விமான நிலையத்தில் கூடியுள்ளனர். இந்த மக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் என பார்க்காமல் ஈவிரக்கமின்றி சாட்டையால் அடித்து தலீபான்கள் துன்புறுத்தி வருகின்றனர்.

இதனையடுத்து பிரித்தானியா துருப்புகளால் ஆப்கானிஸ்தான் மக்களை வெளியேற்ற முடியாமல் போனால் அவர்கள் தலீபான்களால் மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்படுவார்கள். மேலும் ஆப்கானிஸ்தானில் பிறந்து வளர்ந்த நான் கடந்த 2010 ஆம் ஆண்டு பிரித்தானியாவிற்கு புலம்பெயர்ந்தேன். இதனைத்தொடர்ந்து கடந்த 2015 ஆம் ஆண்டு பிரித்தானிய குடியுரிமையும் பெற்றுள்ளேன். இருப்பினும் தற்போது அமெரிக்க ராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் காபூல் விமான நிலையம் இருந்தாலும் அதன் நுழைவு வாயிலில் ஆப்கானிஸ்தான் மக்களை தலீபான்கள் மிரட்டியும் துப்பாக்கியால் வானத்தை நோக்கி சரமாரியாக சுட்டும் அச்சுறுத்தி வருகின்றனர். அதாவது தலீபான்கள் எனது பிரித்தானியா கடவுச்சீட்டை பரிசோதித்து பார்த்த பின்புதான் என்னை உயிருடன் விட்டுள்ளார்கள். இருப்பினும் நான் திருமணம் செய்து கொள்வதற்காக ஆப்கானிஸ்தானுக்கு வந்தேன். மேலும் நான் நான்காவது முயற்சியில் தான் தனது மனைவியுடன் தலீபான்களின் சோதனை சாவடியில் 8 மணி நேர காத்திருப்பிற்கு பிறகு காபூல் விமான நிலையத்திற்குள் நுழைந்து தப்பியுள்ளேன். தற்போது நாங்கள் இருவரும் தெற்கு லண்டனில் உள்ள ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளோம்” என கூறியுள்ளார்.

Contact Us