மாடர்ன் உடையில் ரசிகர்களை மயக்கிய திவ்யபாரதி..

 

பேச்சுலர் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாக உள்ள நடிகை திவ்யபாரதி. இந்த படம் தான் இவருக்கு முதல் படமாகும். பேச்சுலர் படத்தில் ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடித்து வருகிறார். இப்படத்தை சதீஷ் செல்வகுமார் இயக்கி வருகிறார்.

இப்படம் முழுக்க முழுக்க காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டதாக தெரிகிறது. ஏனென்றால் காதலித்த அனைவரும் ஒரு கட்டத்திற்குப் பிறகு கூறுவது “நான் பேச்சுலர் ஆகவே இருந்திருக்கலாம்” எனும் வசனம் தான். இந்த வசனத்தை தான் படக்குழுவினர் பேச்சுலர் என படத்திற்கு பெயர் வைத்துள்ளனர்.

இப்படம் திரைக்கு வர இருப்பதால் இப்படத்தை புரமோஷன் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அதற்காக தொடர்ந்து இப்படத்தை பற்றிய தகவல்களை ஏதாவது பகிர்ந்து வருகின்றனர்.

இப்படத்தின் பஸ்ட் லுக் மற்றும் இப்படத்தில் இடம் பெற்ற லிரிக்ஸ் பாடல்கள் போன்றவை சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடம்சென்றடைந்தது. தற்போது இப்படத்தின் நடிகையான திவ்யபாரதி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தி அதனை அவரது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் அனைத்து ரசிகர்களாலும் பார்க்கப்பட்டு வைரலாகி வருகின்றன. மேலும் தங்களது கருத்துக்களை ரசிகர்கள் கமெண்ட் பாக்ஸில் தெரிவித்து வருகின்றனர்.

Contact Us