பிரிவை நோக்கி பிரபல நட்சத்திர ஜோடி ?

 

சினிமா உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவருக்கு தொடர்ந்து பிரச்சனைக்கு மேல் பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. வாய்ப்பு குவிந்து வரும் நிலையில் அந்த நடிகை திரையுலகை விட்டு ஒதுங்க போவதாக கூறப்படுகிறது. அதனால் தான் கமிட்டான படங்களில் விரைவாக நடித்து முடித்து வருகிறாராம். இயக்குனர்கள் நடிகையை தேடி சென்று கதையை கூறி ஒப்பந்தம் செய்ய சென்றாலும், அதையெல்லாம் தவிர்த்து வருகிறாராம்.

நம்ம கோலிவுட்டிலிருந்து அக்கட தேசத்திற்கு சென்ற அந்த நடிகை, பெரிய குடும்பத்தில் மருமகளானவர். திருமணத்திற்கு பிறகும் பிசியாக திரைப்படங்களில் நடித்து வருகிறார். கணவர் கொடுக்கும் முழு ஆதரவால் முழு உற்சாகத்தோடு படங்களில் பணியாற்றி வந்தாராம். ஆனால் சமீபத்தில் நடிகை ஒரு சர்ச்சைக்குரிய படத்தில் நடித்திருக்கிறார். அந்த படம் பெரிய வெற்றியை அவருக்கு தேடிக்கொடுத்தாலும், குடும்பத்திற்கு அது பிடிக்கவில்லையாம்.

என்ன காரணம் என்று விசாரித்தபோது, நடிகை அந்த படத்தில் கவர்ச்சிக்கு கொஞ்சம் தாராளம் காட்டியிருக்கிறார். இதனால் நடிகையின் வீட்டில் ஒரு பூகம்பமே வெடித்துள்ளது. தற்போது குடும்பத்தினரோ, அந்த நடிகையை இனி படங்களில் நடிக்கக்கூடாது என்று கண்டிப்பாக உத்தரவு போட்டுவிட்டார்களாம். நடிகையோ அது முடியாது என்று கூறியதால் பிரச்சனை பெரிதாகிவிட்டது. இதையடுத்து கணவர் – மனைவி இடையே விரிசல் ஏற்பட்டு விவகாரத்து வரை சென்றுவிட்டதாம். அதேநேரம் சமூக ஊடகங்களில் இந்த நட்சத்திர ஜோடி பிரிய உள்ளதாகவும் தொடர்ந்து வதந்தி பரப்பப்பட்டு வருகிறது. நடக்கும் சம்பவங்களை பார்த்தால் இந்த வதந்தி விரைவில் உண்மையாகி விடுமோ என்ற பீதி அனைவரிடமும் உள்ளது.

Contact Us