“கேமரா வைத்து ,உறவு வைத்து ….”டென்னிஸ் வீரருக்கு ஆப்பு வைத்த பெண்கள்

 

ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூரில் ஹரியானாவைச் சேர்ந்த 17 வயதான இளம் டென்னிஸ் வீரர் ஒருவர் தன்னுடைய பெற்றோருடன் வசித்து வந்தார். அந்த வீரரின் தந்தை மிகப்பெரிய பணக்காரர். இதை அந்த ஊரை சேர்ந்த ஒரு பெண் தெரிந்து கொண்டார். அதனால் அந்த டென்னிஸ் வீரரிடம் பணம் பறிக்க திட்டமிட்டார். அதனால் அந்த பெண் அந்த டென்னிஸ் வீரரை 2018ம் ஆண்டு நடைபெற்ற ஒரு டென்னிஸ் போட்டியில் சந்தித்து அவரோடு நட்பு கொண்டார்.

பிறகு அவரிடம் அடிக்கடி சமூக ஊடகம் மூலமாகவும், போனிலும் அரட்டையடித்து வந்தார் . அதன் பிறகு அவரை ஜெய்ப்பூரில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு வரவைத்து, உல்லாசமாக இருந்து அதை மறைவாக கேமரா வைத்து படம் பிடித்து வைத்து கொண்டார். அதன் பிறகு அந்த பெண் அந்த வீடியோவை அவரிடம் காண்பித்து, பணம் கேட்டு மிரட்டினார் ,அதனால் பயந்து போன அந்த வீரர் 10 லட்ச ரூபாய்க்கு மேல் அந்த பெண்ணிடம் கொடுத்தார் .

அதன் பிறகு அந்த பெண் அவரை விடாமல் துரத்தி சிம்லா, டெல்லி போன்ற பல இடங்களுக்கு சுற்றுலா கூட்டி சென்று அங்கு ஹோட்டல் பில் போன்றவற்றை கட்ட வைத்து பணம் பறித்தார் . பின்னர் அந்த டென்னிஸ் வீரரின் வீடியோவை செய்தி டிவியில் ஒளிபரப்புவதாக கூறி ஒரு செய்தியாளர் மூலமும் பணம் பறிக்க ப்ளாக் மெயில் செய்தார். இதனால் அந்த டென்னிஸ் வீரர் பயந்து போய் தன்னுடைய பெற்றோருடன் சேர்ந்து கொண்டு போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் அந்த பத்திரிகையாளர் கரன் திவாரி, 4 பெண்கள் மற்றும் மேலும் ஒருவர் மீது பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Contact Us