காதலியை கொன்றுவிட்டு காதலன் தற்கொலை.. வெளியான புகைப்படம்..!!

 

இங்கிலாந்தில் உள்ள வடக்கு நார்தம்ப்டன்ஷைர், Kettering-ல் இருக்கும், Slate Drive என்னும் பகுதியில், 3 லட்சம் மதிப்புக்கொண்ட ஒரு குடியிருப்பில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மதியம் ஒரு மணிக்கு, உயிரிழந்த நிலையில் இருவரின் உடல்கள் காவல்துறையினரால் கண்டறியப்பட்டது.

உயிரிழந்தவர்கள் குறித்த தகவல்கள் மற்றும் புகைப்படங்களை தற்போது காவல்துறையினர் வெளியிட்டிருக்கிறார்கள். Benjamin Green என்ற 41 வயது நபர் மற்றும் Maddie என்ற 22 வயது இளம்பெண் இருவரும் தான் உயிரிழந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணை மேற்கொள்ளப்பட்டதில், Benjamin நீர் மேலாண்மை நிறுவனத்தின் மார்க்கெட்டிங் இயக்குனர் மற்றும் குழந்தைகளுக்கான புற்றுநோய் தொண்டு அறங்காவலராகவும்இருந்ததாக தெரியவந்துள்ளது.

இதேபோன்று, மேடி, கேம்பிரிட்ஜ்ஷையரில் வசிப்பவர். இவர் சந்தைப்படுத்தல் நிர்வாகியாகவும் திறமையான நடனக் கலைஞராகவும் அறியப்படுகிறார். இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடங்களாக பழகி வந்துள்ளனர். இருவருக்கும் இடையே மோதல் இருந்ததாக தெரியவில்லை. எனினும் வீட்டில் இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில், பெஞ்சமின் தான், தன் காதலியை கொன்று விட்டு அவரும் தற்கொலை செய்திருப்பார் என்று காவல்துறையினர் கருதுகிறார்கள்.

இதனிடையே, அக்கம் பக்கத்தினர் விசாரணையில் தெரிவித்திருப்பதாவது, பெஞ்சமின் திமிராக நடந்து கொள்பவர் போல் தெரிந்ததாகவும், அவருக்கு 3 காதலிகள் இருப்பதாகவும் கூறினார்கள். மேலும் ஒரு நண்பர் கூறுகையில், அவர்கள் இருவரும் இரண்டு வருடங்களாக ஒன்றாக மகிழ்ச்சியாக இருந்ததாக கூறியுள்ளார். எனவே, இந்த சம்பவம் தொடர்பில் காவல்துறையினருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

Contact Us