குடிபோதையில் சூப்பர் மார்க்கெட்டுக்குள்… இளம்பெண் செய்த காரியம்…. அலறி ஓடிய பொதுமக்கள்….!!!

 

அமெரிக்காவின் பென்சில்வேனியா என்ற மாகாணத்தில் சூப்பர் மார்க்கெட்டுக்கு சென்ற இளம்பெண் ஒருவர் தனக்கு கொரோனா இருப்பதாக கூறிய இருமிய காரணத்தினால் இரண்டு ஆண்டுகள் சிறை மற்றும் 22 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா தொற்றின் இரண்டாம் அலை காரணமாக பெரும் இன்னல்களை சந்தித்து வந்தனர். பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இன்னும் சில பகுதிகளில் கூட ஊரடங்கு தற்போது வரை அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவின் பென்சில்வேனியா என்ற மாகாணத்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து 37 வயதுடைய பெண் சூப்பர் மார்க்கெட்டிற்கு நடுவே சென்று எனக்கு “எனக்கு கொரோனா வைரஸ் இருக்கிறது.

இனி உங்களுக்கு எல்லாம் அது பரவ போகிறது” என கூறியுள்ளார். இதனால் அங்கிருந்த மக்கள் உடனடியாக சூப்பர் மார்க்கெட்டை விட்டு வெளியே ஓடினர். பின்னர் பாதுகாவலர்கள் அந்த பெண்ணை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவர்கள் அந்த பெண்ணிற்கு பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு கொரோனா இல்லை என்பது தெரியவந்தது. பின்னர் ஏன் இவர் இப்படி செய்தார் என்று விசாரணை செய்ததில், அவர் அதிக அளவு மது போதையில் இருந்துள்ளார். தன் சுய நினைவை இழந்த போது இவ்வாறு செய்துள்ளது தெரியவந்தது. ஆனால் இப்பெண் செய்த காரியத்தால் அந்த சூப்பர் மார்க்கெட்டில் உள்ள பொருட்கள் மீது கொரோனா வைரஸ் இருக்கும் என்று அச்சத்தில் மக்கள் யாரும் பொருளை வாங்குவதற்கு வரவில்லை.

இதனால் சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் சுமார் 35 ஆயிரம் டாலர் மதிப்புள்ள பொருட்கள் அனைத்தையும் தீயிட்டுக் கொளுத்தியது. சூப்பர் மார்க்கெட் முழுவதும் சனிடைசர் செய்தது. பின்னர் சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் அப்பெண்ணின் மீது வழக்கு பதிவு செய்து, 25 லட்சம் நஷ்டஈடு வழங்கும்படி கூறியிருந்தது. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி அந்த பெண்ணிற்கு 2 ஆண்டு சிறை மற்றும் 30 ஆயிரம் டாலர் அதாவது சுமார் இருபத்தி இரண்டு லட்சம் நஷ்டஈடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.

Post Views: 0

Contact Us