பிரித்தானிய சாரதிகளுக்கு எச்சரிக்கை!

 

பிரித்தானியாவில் உள்ள சாரதிகள் தங்களின் ஓட்டுநர் உரிமத்தை சோதிக்கும்படி வலியுறுத்தப்பட்டுள்ளனர். கொரோனா பரவல் காரணமாக அளிக்கப்பட்டிருந்த நீட்டிப்பு விரைவில் முடிவடையும் என்பதனால் இந்த வலியுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020 பிப்ரவரி 1 மற்றும் டிசம்பர் 31ம் திகதி வரையான காலகட்டத்தில் காலாவதியாக வேண்டிய சாரதி உரிமங்களுக்கு கொரோனா பரவல் உச்சத்தில் இருந்ததால் 11 மாதங்கள் நீட்டிப்பு வழங்கப்பட்டது.

அதில், ஓட்டுநர் உரிமம் காலாவதியாகும் நாளிலிருந்து நீட்டிப்பு செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி அக்டோபர் 2020ல் காலாவதியாக வேண்டிய ஓட்டுநர் உரிமமானது செப்டம்பர் 2021ல் புதுப்பித்துக்கொள்ள வேண்டும். டிசம்பர் 2020ல் காலாவதியாகும் என்றால் கொரோனா பரவல் நீட்டிப்புக்கு பின்னர் புதிய காலாவதியாகும் நாள் நவம்பர் 2021 என குறிப்பிடப்பட்டுள்ளது.

அது மட்டுமின்றி, நீட்டிப்பு காலாவதியாகும் முன் ஒரு நினைவூட்டல் கிடைக்கும் வரை. வாகன சாரதிகள் தங்கள் உரிமம் புதுப்பிக்க விண்ணப்பிக்க தேவையில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் , காலாவதி கடந்தும் உரிமம் புதுப்பிக்காத சாரதிகளுக்கு 1,000 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட உள்ளது.

இதேவேளை பிரித்தானிய சாரதிகளை பொறுத்தமட்டில் 5-ல் ஒருவருக்கு(20%) ஓட்டுநர் உரிமங்களுக்கு காலாவதி திகதி இருப்பதே தெரியவில்லை எனவும், 10-ல் ஒருவருக்கு(11%) தங்கள் உரிமம் காலாவதியானது கூட தெரியவில்லை என ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

மேலும் 70 வயதுக்கு உட்பட்டவர்கள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை தங்கள் ஓட்டுநர் உரிம அடையாள அட்டையை புதுப்பிக்க வேண்டும், 70 வயது கடந்தவர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் நினைவூட்டல் அளிக்கப்படுகிறது.

இதேவேளை , புதுப்பிக்கலுக்கு விண்ணப்பித்தவர்கள் தாராளமாக தங்கள் வாகனங்களை இயக்கலாம் என்றே கூறப்படுகிறது.

Contact Us