‘அம்மா என்னை காப்பாற்றுங்கள்’…. தீ விபத்தில் சிறுவன் பலி…. சோகத்தில் மூழ்கிய குடும்பத்தினர்….!!

 

அமெரிக்காவில் உள்ள நியூயார்க் நகரத்தில் ஒரு கூட்டுக் குடும்பம் வசித்து வருகின்றது. அந்தக் குடும்பத்தில் Remi Miguel Gomez Hernandez என்னும் 9 வயது சிறுவன் உட்படமொத்தம் 14 பேர் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த புதன்கிழமை அதிகாலை 2 மணியளவில் ‘அம்மா என்னை காப்பாற்றுங்கள் அம்மா’ என்று ஒரு அழுகுரல் கேட்டுள்ளது.

இதனை அடுத்து அந்த சிறுவனின் பெற்றோர் முழித்துக்கொண்டுள்ளனர். இதன் பிறகு சிறுவனின் அழுகுரல் நின்றுள்ளது. இதனையடுத்து மகனின் அறையில் தீப்பிடித்து எரிவதைக் கண்ட அவனது தந்தை அறையினுள் செல்ல முயற்சித்துள்ளார். ஆனால் அவருக்கும் தீக்காயங்கள் ஏற்பட்டதே தவிர அவரால் தன் மகனை காப்பாற்ற முடியவில்லை என்று போலீசார் கூறியுள்ளனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் வீட்டில் இருந்த மற்ற 13 பேரையும் காப்பாற்றியுள்ளனர். ஆனால் இறுதியாக சிறுவனை காப்பாற்றும் பொழுது அவன் இறந்த நிலையிலேயே மீட்கப்பட்டான். மேலும் தீயானது 30 நிமிடங்கள் போராடிய பிறகு அணைக்கப்பட்டுள்ளது. அதிலும் 14 பேர் கொண்ட கூட்டு குடும்பத்தில் 9 வயது சிறுவன் பலியான சம்பவம் குடும்பத்தாரிடம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக மின்சார இருசக்கர வாகன பேட்டரியால் தீ விபத்து ஏற்பட்டது இது மூன்றாவது தடவையாகும் என்று போலீசார் கூறியுள்ளனர்.

Contact Us