21 கலை மற்றும் கலாச்சார நகைகள்…. கைவரிசையை காட்டிய மர்மநபர்கள்…. குண்டு கட்டாக தூக்கி போலீஸ்….!!

 

ஜெர்மனியில் கிரீன் வால்ட் என்னும் அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் கடந்த 2019ஆம் ஆண்டு சுமார் 113 1.8 மில்லியன் யூரோ மதிப்புடைய 4,300 வைரங்கள் பதிக்கப்பட்ட 21 நகைகளை மர்ம நபர்கள் அருங்காட்சியகத்தில் மின் விநியோகத்தை தடை செய்து திருடி சென்றுள்ளார்கள். அதோடு மட்டுமின்றி அருங்காட்சியகத்திற்கு அருகிலிருந்த கார் ஒன்றையும் மர்ம நபர்கள் தீ வைத்து எரித்துள்ளார்கள்.

இந்நிலையில் தற்போது இந்த வழக்கு தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் 6 பேரை கைது செய்துள்ளார்கள். மேலும் அவர்களிடம் அருங்காட்சியகத்தில் நடந்த கொள்ளை தொடர்பான தீவிர விசாரணையையும் மேற்கொண்டு வருகிறார்கள். இருப்பினும் அந்த 6 பேரும் காவல்துறை அதிகாரிகள் விசாரணையில் தற்போது வரை தங்களது கொள்ளை குற்றத்தை ஒப்புக் கொள்ளவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

Contact Us