பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கு தலிபான்கள் கையிலா…? தனது இடத்தை நான் காப்பேன்…. டுவிட்டரில் வெளியான தகவல்….!!

 

ஆப்கானிஸ்தான் நாட்டின் தலைநகர் காபூலை கைப்பற்றிய தலிபான்கள் அங்கு ஆட்சி அமைப்பது தொடர்பாக தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இருப்பினும் தலிபான்களால் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கை கைப்பற்ற முடியவில்லை. ஆகையினால் அந்த பள்ளத்தாக்கில் முன்னாள் துணை அதிபர் தலைமையில் தலிபான்களுக்கு எதிரான படை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து பள்ளத்தாக்கில் உருவாக்கப்பட்ட தலிபான்களுக்கு எதிரான எதிர்ப்பு படையினருக்கும், தலிபான்களுக்குமிடையே தற்போது மோதல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ராய்ட்டர் செய்தி நிறுவனம் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கும் தலிபான்கள் தங்கள் வசம் சென்று விட்டதாக தலிபான்கள் தெரிவித்துள்ளதாக தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆனால் ராய்ட்டர் செய்தி நிறுவனம் வெளியிட்ட இந்த தகவலை ஆப்கனின் முன்னாள் துணை அதிபரான அம்ருல்லா திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். மேலும் இது தொடர்பாக ட்விட்டரில் “தனது இடத்தையும், அதனுடைய கண்ணியத்தையும் காப்பதற்கு ஆப்கனின் முன்னாள் துணை அதிபரான அம்ருல்லா இருக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் தற்போது வரை தலிபான்களுக்கு எதிரான மோதல் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கில் தொடர்வதாகவும் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Contact Us